புதன், 22 நவம்பர், 2017

இந்திய தொழிற்சங்க இயக்கத்தின் மகத்தான தலைவர்களில் ஒருவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவருமான தோழர் சுகுமால் சென், புதனன்று கொல்கத்தாவில் காலமானார். அவருக்கு வயது 83. கடந்த சில மாதங்களாக உடல்நலம் குன்றியிருந்த தோழர் சுகுமால்சென் செவ்வாயன்று இரவு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி புதனன்று காலை மரணமடைந்தார்.
தோழரின் மறைவிற்கு ஈரோடு மாவட்ட சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது

வெள்ளி, 20 அக்டோபர், 2017


விரிவடைந்த செயற்குழு ----------மதுரை

மதுரையில் 21/10/2017 அன்று நடைபெற உள்ள விரிவடைந்த மாநில  செயற்குழு மற்றும் நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு விழா கூட்டத்திற்கு அனைத்துகிளைச்செயலர்களும் தவறாமல் பங்கெடுக்கவேண்டும் .இக் கூட்டத்திற்கு ஈரோடு மாவட்டத்தில் இருந்து 50 பேர் கலந்து கொள்ளவேண்டும் என மாநில சங்கம் வேண்டுகோள் விடுத்து உள்ளது .அனைத்து கிளைகளும் அதற்குரிய பணிகளை செய்திட மாவட்ட சங்கம் கேட்டு கொள்கிறது .

வியாழன், 5 அக்டோபர், 2017


மத்திய சங்கங்களின் செய்திகள் -04-10-2017 –நியுடெல்லிமத்திய சங்கங்களின் செய்திகள்  -04-10-2017 –நியுடெல்லி
அனைத்து  BSNL ஊழியர் சங்கங்கள்/கூட்டமைப்புகளின்
ஏகோபித்த முடிவுகள் விபரம்
1)இனி அனைத்து ஊழியர் மற்றும் அதிகாரிகளின் சங்கங்கள் /கூட்டமைப்புகள் “ALL UNIONS and ASSOCIATIONS OF BSNL” என்ற பதாகையின் கீழ்செயல்பட்டு,பொதுப்பிரச்சனைகளான சம்பள உடன்பாடு , துணைடவர் நிறுவனம் அமைவதை தடுப்பது போன்ற பிரச்சனைகளுக்காக போராடும்
2)அனைத்து பொதுச்செயலர்கள் விரைவில் நிர்வாகத்திற்கு போராட்ட அறைகூவலை ஒன்றுபட்டு வெளியிடுவார்கள்
3)கீழ்க்கண்ட பிரச்சனைகள் உடனடி தீர்வுக்காக போராட்ட கோரிக்கையாக கண்டறியப்பட்டுள்ள
v  01-01-2017 முதல் சம்பள மாற்றம் மற்றும் 2 வது ஊதிய உடன்பாட்டில் தீர்க்கபடாமல் உள்ள நேரடி நியமன ஊழியர்களின் ஓய்வு கால பலன்கள்
v  துணை டவர் நிறுவனம் அமைப்பதை தடுத்து நிறுத்துவது
4) கீழ்க்கண்ட போராட்ட திட்டங்கள் முடிவெடுக்கப்பட்டுள்ளன.
அ)16-10-2017 அன்று கார்ப்பரேட் ,மாநில மாவட்ட தலைமை அலுவலகங்களின் முன்பு ஆர்ப்பாட்டம்
ஆ)16-11-2017 அன்று கார்ப்பரேட் ,மாநில மாவட்ட தலைமை அலுவலகங்களின் முன்பு மனிதசங்கிலி  இயக்கம்
இ)15-11-0271 அன்று பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை மனு அளித்தல்
ஈ)12,13-12-2017 தேதிகளில் இரண்டு நாள் வேலை நிறுத்தம்
உ)காலவரையற்ற வேலை நிறுத்தம்- தேதி பின்னர் அறிவிக்கப்படும்

5) அடுத்த கூட்டம் 23-10-2017 அன்று நடைபெறும்
பொறுத்த்து போதும் !                             பொங்கி எழுவோம்!
புனலாய் எழுவோம் !          கனலாய் சுடுவோம்!      சந்தித்தோம்-சாதிப்போம்
போராட்டகளத்திற்கு தயாரோம் என
எல்.பரமேஸ்வரன்
மாவட்ட செயலர்

ஞாயிறு, 30 ஜூலை, 2017

அரசு ஊழியர் இயக்க முன்னோடி தோழர் ஆர்.முத்துசுந்தரம் காலமானார்தமிழக அரசு ஊழியர் இயக்கத்தின் மகத்தான தலைவர்களில் ஒருவரான தோழர் ஆர்.முத்துசுந்தரம் காலமானார். அவருக்கு வயது 66.சமீப மாதங்களாக நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், ஈரோடுமாவட்ட அரசு தலைமை மருத்துவமனை யில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை (29.7.2017) மாலை 6 மணி அளவில் மருத்துவ மனையிலேயே மரணமடைந்தார். அவரது மரணச் செய்தி அறிந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஊழியர் இயக்கத்தினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி இயக்கங்களின் தோழர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
மதுரை மாவட்டம் சமயநல்லூரைச் சேர்ந்த தோழர் ஆர்.முத்துசுந்தரம், ஈரோடு மாவட்டம் தாளவாடியில் கல்வித்துறையில் அமைச்சுப் பணி ஊழியராக தனது அரசுப்பணி வாழ்க்கையை துவக்கினார். கல்வித் துறை ஆணையரின் தனிச்செயலாளர் பதவிவரை அரசுப் பணியில் உயர்ந்தார். 1978-80 காலக்கட்டத்தில் தமிழ்நாடுஅரசு ஊழியர் சங்கத்தை உருவாக்குவதற் காக பணியாற்றிய முன்னோடித் தலைவர்களில் ஒருவராக செயல்பட்டவர் தோழர்முத்துசுந்தரம். சங்கத்தை கட்டி அமைப்ப தற்காக மாநிலம் முழுவதும் இடைவிடாமல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசு ஊழியர்களை அணி திரட்டியவர்.
தமிழ்நாடுஅரசு ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளராக நீண்டகாலம் பணியாற்றிய அவர், தமிழக அரசு ஊழியர்களின் போரா ட்ட குணமிக்க தோழராக - அவர்களது அன்புக்குரிய தலைவராக உயர்ந்தவர். பின்னாட்களில் அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளராக, அகில இந்திய தலைவராக, அகில இந்திய கவுரவத் தலைவராக பொறுப்பு வகித்து, நாடு முழுவதும் அரசுஊழியர்களை அணிதிரட்டுவதில் முன்னணிப் பாத்திரம் வகித்தவர் தோழர் முத்துசுந்தரம்.அகில உலக தொழிற்சங்க சம்மேள னத்தின் தலைவர்களில் ஒருவராகவும் பரிணமித்தவர் அவர். பல்வேறு நாடுகளில் நடைபெற்ற தொழிற்சங்க சம்மேளன மாநாடுகளில் பங்கேற்றவர்.
கலை இலக்கியப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட முத்துசுந்தரம் சிறந்தபேச்சாளரும், அமைப்பாளரும் ஆவார் என்றும், அவரது மறைவு இடதுசாரி இயக்கத்திற்கும், தமிழகம் உள்பட அகில இந்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். மேலும், ‘‘தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளராக பல்லாண்டுகால மாக பணியாற்றி வழிகாட்டிய தோழர் முத்து சுந்தரம், தமிழக அரசு ஊழியர்களின் நலன்களைப் பாதுகாக்க முன்னின்று உழைத்தவர். 2003ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது 1லட்சத்து 72 ஆயிரம் அரசு ஊழியர்-ஆசிரியர்கள் எஸ்மா, டெஸ்மா சட்டத்தின்கீழ் டிஸ்மிஸ் செய்யப் பட்டபோது அதற்கு எதிராக போராடியும், உச்சநீதிமன்றத்தில் வழக்காடியும், டிஸ்மிஸ் செய்யப்பட்ட அனைவருக்கும் மீண்டும்பணி கிடைக்கச் செய்ததிலும் அவரது பங்குகுறிப்பிடத்தக்கது’’   தோழரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்

புதன், 28 செப்டம்பர், 2016

வீரராகவனின் தொடரும் துரோகம்

கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு சொந்தமான வெள்ளானூர் நிலத்தை சூறையாட வீரராகவனின் துரோகம் தொடர்கிறது

புதன், 31 ஆகஸ்ட், 2016

செப்.2: களம் காணும் பிஎஸ்என்எல் ஊழியர்கள்

.பாபுராதாகிருஷ்ணன், தமிழ் மாநிலச் செயலாளர், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம். அவர்களின் தீக்கதிர் நாளிதழில் 31-08-2016 அன்று வந்துள்ள கட்டுரை   << கட்டுரை படிக்க >>>

வியாழன், 12 மே, 2016

தேர்தல் முடிவுகள்

S.NO
SSA
BSNLEU
NFTE
OTHER
1
A&N
73
70

2
AP
9651
6326

3
AS
2636
439

4
BH
1314
1941

5
CHG
513
756

6
GJ
5386
4605

7
H.P
1324
755

8
HR
1563
1435

9
J&K
738
703

10
JH
406
1098

11
KTK
6481
4273
526
12
KR
6370
631
1434
13
MP
3757
2354
145
14
MH
8022
4948

15
NE-1
1112
65

16
NE-11
846
114

17
NTR
205
494

18
OR
1337
1101

19
PB
2934
2115

20
RAJ
4228
2488

21
TN
4972
5584

22
UP-E
3410
3138

23
UP-W
2734
2077

24
UTL
863
411

25
WB
3497
738

26
CTD
2207
2531

27
KTD
3501
215

28
ALTTC
32
52

29
BRBRAITT
49
4

30
C.O
90
152

31
INSP.CIR
35
3

32
TF.J
241
174

33
TF.K
341
180

34
TF.M
198
193

35
TS
99
9


TOTAL
81165
52172
2105